உன் நினைவுகள்
கனக்கத் தொடங்கும் பொழுதெல்லாம்
ஏதாவது கிறுக்கத் தொடங்கிவிடுகிறேன்
உனக்கான எதிர்பார்ப்பின் உச்சங்களிலும் ,
எனக்கான ஏமாற்றத்தின் மிச்சங்களிலும் மட்டுமே
இன்னும் கசிந்துகொண்டிருக்கிறது
உன்னைப் பற்றிய நினைவுகள்
இது போன்ற கவிதைகளாக !
உன் விரல் பிடித்து கடந்த சென்ற
வழிப்பாதைகள் மட்டுமே எனது
மொத்த உலகமென எண்ணி எப்பொழுதும்
உற்றுப் பார்த்துகொண்டிருக்கிறேன் !
மை தீர்ந்த தூரிகை என்று தெரிந்தும்
மனம் அதன் பின்னே ஏனோ
தொடர்ந்து செல்ல நினைக்கிறது .
காரணம் இதுவரை அறிந்ததில்லை !
அவ்வப்பொழுது நிகழும் ஏதேனும்
எதிர்பாராத நிகழ்வுகள் அனுமதியின்றியே
என்னை மீண்டும் கடந்தக்கலங்களில்
தள்ளி தாழிட்டு விடுகின்றன !
No comments:
Post a Comment