Showing posts with label பனித்துளி சங்கரின் கவிதைகள். Show all posts
Showing posts with label பனித்துளி சங்கரின் கவிதைகள். Show all posts

Tuesday, September 7, 2010

மை தீர்ந்த தூரிகை

உன் நினைவுகள்
கனக்கத் தொடங்கும் பொழுதெல்லாம்
ஏதாவது கிறுக்கத் தொடங்கிவிடுகிறேன்
உனக்கான எதிர்பார்ப்பின் உச்சங்களிலும் ,
எனக்கான ஏமாற்றத்தின் மிச்சங்களிலும் மட்டுமே
இன்னும் கசிந்துகொண்டிருக்கிறது
உன்னைப் பற்றிய நினைவுகள்
இது போன்ற கவிதைகளாக !

உன் விரல் பிடித்து கடந்த சென்ற
வழிப்பாதைகள் மட்டுமே எனது
மொத்த உலகமென எண்ணி எப்பொழுதும்
உற்றுப் பார்த்துகொண்டிருக்கிறேன் !


மை  தீர்ந்த தூரிகை என்று தெரிந்தும்
மனம் அதன் பின்னே ஏனோ
தொடர்ந்து செல்ல நினைக்கிறது .
காரணம் இதுவரை அறிந்ததில்லை !

வ்வப்பொழுது நிகழும் ஏதேனும்
எதிர்பாராத நிகழ்வுகள் அனுமதியின்றியே
என்னை மீண்டும் கடந்தக்கலங்களில்
தள்ளி தாழிட்டு விடுகின்றன !